பிரான்சின் 36 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சில பகுதிகளில் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

கடுமையான பனி மற்றும் கடுங்குளிர் காரணமாக பிரான்சின் 36 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில், மேற்கிலுள்ள பிரிட்டனியிலிருந்து கிழக்கிலுள்ள Alsace வரையான வட பகுதியின் பெரும்பாலான இடங்களுக்கு கடுமையான பனி மற்றும் கடுங்குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வார இறுதியிலேயே வெப்பநிலை கடுமையாக குறைந்த நிலையில், வரும் நாட்கள் குளிர் இன்னமும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


36 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அளவுக்கதிகமான பனி, பனி நிறைந்த சாலைகள் மற்றும் கடுங்குளிர் முதலான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சம்பந்தப்பட்ட இடங்களில் வசிப்போர் பயணங்களை தவிர்க்குமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு - https://www.thelocal.fr/20210208/snow-and-freezing-temperatures-predicted-across-northern-france-this-week

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்