பிரான்சில் நேற்று மட்டும் கொரோனாவால் 21,000 பேர் பாதிப்பு! 300-க்கும் மேற்பட்டோர் பலி

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 371 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக, பிரான்சில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதைக் கட்டுப்படுத்த தவறினால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் 371 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21,063 பேர் புதித்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,406,685-ஆக அதிகரித்தள்ளது.

வியாழக்கிழமையையுடன், நேற்று முன் தினம் புதன் கிழமை ஒப்பிடும் போது, தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. தொற்று வீதம் 6.3 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,406,685-ஆக அதிகரித்தள்ளது.

கடந்த ஏழு நாட்களில் மட்டும், 10,396 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,756 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மொத்தமாக 26,693 பேர் மருத்துவமனையிலும், அவர்களில் 3,327 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்