பிரான்சின் இந்த பகுதிகளில் புதிய வகை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது! வெளியான முழு விபரம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சின் வடகிழக்கு பிராந்தியங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது புதிதாக உருமாறி, பிரித்தானியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பரவி வருகிறது.

குறிப்பாக பிரான்சில் உருமாறிய பிரித்தானியா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சின் வடகிழக்கு பிராந்தியங்களில் தீவிரமாக பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, எல்லை நகரமான Bas-Rhin நகரிலும் Haut-Rhin நகரிலும் தீவிரமாக பரவி வருகின்றது.

Bas-Rhin நகரில் கிட்டத்தட்ட 658 பேருக்கும் Haut-Rhin நகரில் 210 பேருக்கும் என மொத்தம் 868 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்சில் பரவிவரும் கொவிட் 19 வகை கொரோனாக்களை விட மிகவும் ஆபத்தான இந்த வைரஸ், மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 14.2 சதவீதமான இடத்தை பிடித்துள்ளது.

இத்தகவலை Alsace பிராந்திய l'Agence régionale de santé வெளியிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்