பிரான்சில் இந்த 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! ஒரு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றோடு குளிர்காலம் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கிடையே பிரான்சில் குளிர் கடுமையாக வாட்டி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது சற்று முன் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குறித்த மாவட்டங்களில் -15 டிகிரி உறை குளிர் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Chérac மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடும் புயலுடன் கூடிய மழை பொழியும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இன்றோடு குளிர் நிறைவடைவதாகவும், நாளை வெப்பநிலை மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 13 மாவட்டங்களின் பட்டியல்

  • Aube
  • Côte-d'Or
  • Doubs
  • Haute-Marne
  • Meurthe-et-Moselle
  • Meuse
  • Moselle
  • Bas-Rhin
  • Haut-Rhin
  • Haute-Saône
  • Vosges
  • Yonne
  • Territoire de Belfort

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்