கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்! தெரிய வந்த காரணம்

Report Print Ragavan Ragavan in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் ஹோட்டல்களின் தரவரிசையை தவறாக காட்டியதற்காக கூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஹோட்டல்களின் தவறான தரவரிசையைக் காட்டியதற்காக கூகிள் 1.1 மில்லியன் யூரோ அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னதாக, கூகிள் அதிகாரப்பூர்வ ஆதாரமான 'about பிரான்ஸ்' மற்றும் ஹோட்டல் தொழில் வலைத்தளத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை தரவரிசையாக வழங்கியது.

கூகிளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு அரசாங்க நிறுவனம் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இந்த விவகாரத்தில் விசாரணைகளைத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, கூகிளின் ஹோட்டல் தரவரிசை நுகர்வோரை தவறாக வழிநடத்துவது விசாரணையில் தெரியவந்த நிலையில், கூகிள் அயர்லாந்து மற்றும் கூகிள் பிரான்ஸ் ஆகிய இரண்டும் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரான்சின் நிதி அமைச்சகம் மற்றும் மோசடி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்