அழகிய இளம்பெண்ணுக்கு வரும் கொலை மிரட்டல்கள்... காரணம் சமூக ஊடகங்களில் அவர் வெளியிடும் படங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

ஒரு அழகிய பிரெஞ்சு இளம்பெண்ணுக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருகின்றனவாம், அதற்கு காரணம், சமூக ஊடகங்களில் அவர் வெளியிடும் படங்கள்!

Johanna Clermont (23)ஐ 300,000 பேர் சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறார்கள்.

அதே நேரத்தில் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களால் அவருக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. காரணம்? Johanna ஒரு வேட்டைக்காரர்... வேட்டையாடிய விலங்குகளுடன் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செய்ய, வேட்டையை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் அவரை குறிவைத்துள்ளன.

ஆனால், மிரட்டல்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் தன் வேட்டையைத் தொடர்கிறார் Johanna.

வேட்டையாடுவதால் தன்னைக் குறித்து விமர்சனங்கள் வந்தாலும், தான் வேடையாடும்போது, தன்னுடன் வேட்டையாடும் ஆண்கள் தன்னை ஒரு பெண் என அவமதிப்பதில்லை என்கிறார் Johanna.

சொல்லப்போனால், தங்கள் வேட்டைக் குழுவில் வேட்டையாடத் தெரிந்த ஒரு பெண் இருப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார் அவர்.

அதே நேரத்தில், பெண் என்றால் அவள் தான் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி, அது அலுவலக வேலையானாலும், வேட்டையானாலும் அவள் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டேயாகவேண்டியுள்ளது என்கிறார் Johanna.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்