சர்வதேச சுற்றுலா பயணிகளே... தயவுசெய்து எங்கள் நகரத்திற்கு வராதீர்கள்! பிரபல பிரான்ஸ் நகர மேயர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் நகரமான நைஸில் சுற்றுலா பயணிகள் குவிவதை தடுக்க வார இறுதி நாளில் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் என அந்நகர மேயர் Christian Estrosiஅழைப்பு விடுத்துள்ளார்.

நைஸ் நகரம் பிரான்சில் மிக உயர்ந்த கொரோனா நோய்த்தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது.

அந்நகரில் 1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் வாரத்திற்கு 740 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, தேசிய சராசரியை விட இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நைஸ் நகரில் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து இந்த வார இறுதியில் அரசாங்கம் முடிவு செய்யும் என்று சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு தழுவிய மாலை 6 மணி ஊரடங்கு உத்தரவு, கடுமையான அல்லது பகுதிநேர-குறிப்பிட்ட ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றுக்கு மேலாக எங்கள் நகரத்திற்கு வலுவான நடவடிக்கைகள் தேவை என நைஸ் நகர மேயர் Christian Estrosi தெரிவித்துள்ளார்.

வார இறுதிநாட்களில் ஊரடங்கு அமுல்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும், இது சுற்றுலா பயணிகளின் வருகையை தடுக்கும்.

நைஸ் நகரில் வானிலை நன்றாக இருக்கிறது, எல்லோரும் இங்கு வர விரைகிறார்கள். வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதிப்பது நகரத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படுத்தாமல், சுற்றுலா பயணிகளின் வருகையை குறைத்துவிடும் என்று கூறினார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்ததால் நகரில் தொற்று வீதங்கள் அதிகரித்துள்ளதாக மேயர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நாங்கள் வென்றவுடன் இந்த கோடையில் நாங்கள் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவோம்.

ஆனால், சில நாட்களுக்கு இங்கு வர வேண்டாம், இது சரியான தருணம் அல்ல என்று நாங்கள் கூறுவது நல்லதிற்கே. நைஸ் மக்களைப் பாதுகாப்பது தான் என்னுடைய முன்னுரிமை என மேயர் Christian Estrosi கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்