பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்... பிரான்ஸ் இயற்றியுள்ள புதிய சட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நாடு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

ஏற்கனவே பிரான்சுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் உரசல்கள் காணப்படும் நிலையில், பாகிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ள சில கருத்துக்களால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கெதிரான பாகுபாட்டு அணுகுமுறையை சட்டங்களாக ஆக்கவேண்டாம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அதிபரான Arif Alvi, அப்படி செய்யமுயன்றால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பிரான்ஸ் தலைமையை எச்சரித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கெதிரான மசோதா ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

நீங்கள் (பிரான்ஸ்), மக்களை ஒன்று சேர்க்கவேண்டுமேயொழிய, பிரிவினையை உருவாக்கும் வகையில் ஒரு மதத்தின் மீது முத்திரை குத்தக்கூடாது என்றார் Arif Alvi.

இப்படிப்பட்ட முடிவுகள், வெறுப்பைத்தான் உருவாக்கும் என்றார் அவர். ஒரு முழு மதத்தையும் வித்தியாசமான முறையில் முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கு எதிராக முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுப்பது அச்சத்தை உருவாக்குவதுடன், இப்போதில்லாவிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் Arif Alvi.

பிரான்ஸ் கொண்டுவந்துள்ள மசோதாவானது, மசூதிகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு கிளப்களை கண்காணித்து, பிரான்சை தீவிர இஸ்லாமியவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் பிரான்சின் கொள்கைகள் மீதான மரியாதையை மேம்படுத்தும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, முகமது நபி தொடர்பான கேலிச்சித்திரங்களை பிரான்ஸ் அரசாங்கமும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் கண்டிக்காததைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமை பிரான்சை விமர்சித்ததால், பாகிஸ்தானுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்