அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒருவரின் கொலையை மறைத்து, அது தற்கொலை என்று வெளி உலகுக்கு பிரான்ஸ் கூறிவிட்டதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் படைகள், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, விடுதலைப் போராளியான Ali Boumendjel என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டதாகவும், அதை தற்கொலை என கூறி மூடி மறைத்துவிட்டதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
Boumendjelஇன் பேரப்பிள்ளைகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, மேக்ரான் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
1954 முதல் 62 வரையிலான அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, இரண்டு நாடுகளிலும் அராஜக செயல்கள் நடைபெற்றன.
அப்போது, தேசியவாதியும் சட்டத்தரணியுமான Boumendjel என்பவர் பிரான்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி அவரை சித்திரவதை செய்து கொலை செய்தது பிரான்ஸ் இராணுவம்.
வெளி உலகுக்கு தற்கொலை என்று கூறப்பட்ட அந்த சம்பவம், உண்மையில் தற்கொலை அல்ல, அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதுதான் உண்மை என்று Boumendjelஇன் பேரப்பிள்ளைகளிடம் தெரிவித்தார் மேக்ரான்.
2000ஆவது ஆண்டு, பிரான்ஸ் உளவுத்துறையின் முன்னாள் தலைவரான Paul Aussaresses என்பவர், தான்தான் Boumendjelஐ கொலை செய்யவும் அதை தற்கொலை என்று கூறவும் உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.