பிரான்சில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள், தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் இருந்து வெளியேற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டுவருவதுடன், பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள், தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் இருந்து வெளியேற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் Olivier Véran கூறுகையில், தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட முதியவர்கள், முதியோர் இல்லங்களில் இருந்து வெளியேறி வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவ

அவர்களுக்குரிய சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், முதல் கட்ட தடுப்பூசி அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு பின்னர் போடப்படும் இரண்டாம் கட்ட தடுப்பூசி என இரண்டையும் போட்டுக் கொண்டால் தான், அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியே பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இது முதியோர் இல்லத்தில் அடங்கி கிடக்கும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்