பிரான்சில் இன்று நள்ளிரவு முதல் இந்த மாவட்டங்களில் அமுலுக்கு வரும் ஊரடங்கு! கடுமையான சோதனையில் பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு வருவதால், பொலிசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஐரோப்பிய நாடுகளை மிரட்டி வருகிறது. அதில் ஒன்றான பிரான்ஸ் கொரோனாவின் மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Véran, சமீபத்திய ஊடக சந்திப்பின் போது, Nièvre, the Aube மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களுக்கு வரும் வெள்ளிக் கிழமை முதல் ஊரடங்கு அமுலுக்கு வரும் என்று அறிவித்தார்.

இந்த மூன்று மாவட்டங்களுக்கும் நான்குவார காலம் ஊரடங்கு இருக்கும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒருவார காலமாக 16 மாவட்டங்களில் உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது.

குறிப்பாக இந்த 19 மாவட்டங்களிலும் மிக கடுமையான சோதனை இடம்பெறும் எனவும், இதற்காக காவல்துறையினர் மேலதிகமாக கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள், இரயில் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும், இதற்காக 90.000 பொலிசார் மேலதிகமாக பணியில் ஈடுபடுவார்கள் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 16 மாவட்டங்களில் அறிவித்திருப்பது போல், இந்த மூன்று மாவடங்களிலும், ஆறுபேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவது தடை செய்யப்படுள்ளதுடன், 30 கிலோமீற்றர்களுக்குள் மாத்திரமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்