பிரான்சில் இருந்து இந்த நாட்டிற்கு சென்றால் கொரோனா பரிசோதனை கட்டாயம்! வரும் 30-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் நடைமுறை

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்தால் கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலையால் பிரான்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் இருக்கும் 19 மாவட்டங்களில் மாலை நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு செல்பவர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை வரும் செவ்வாய் கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும், கொரோனா பரிசோதனையான PCR அறிக்கையில் எதிர்மறை முடிவு இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உங்களுக்கு அந்த சோதனையில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் இந்த முடிவுகள் கடந்த 72 மணிநேரங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு விமானம் மூலம் பயணிக்க முன்னதாகவே கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தரைவழி பயணத்திற்கும் இந்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்