பிரான்சில் கொரோனா காலகட்டத்தில் அர்பணிப்போடு செயல்பட்ட செவிலியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! நிராகரித்த அரசு

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் கொரோனா காலகட்டத்தில், வேலை செய்து வந்த வெளிநாட்டு செவிலியரின் குடியுரிமைக்கான விண்ணப்பத்தை அந்நாட்டு ரத்து செய்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரான்சில் இருக்கும் மருத்துவமனையில் முழு நேரமாக கடந்த 20 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இதைத் தவிர அருகில் இருக்கும் நர்சிங் ஹோம் ஒன்றில் பகுதி நேரமும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற விண்ணப்பித்திருந்தார்.

அவரின் குடியுரிமை விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசு நிராகரித்தது. ஏனெனில், பிரான்சில் ஒருவர் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட பெண்ணோ, இரண்டு மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்கிறார். இதன காரணமாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, அரசு விளக்கமளித்துள்ளது.

ஆனால், பிரான்ஸ் அரசு கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் புதிய விதிமுறை ஒன்றை அமுல் படுத்தியது. அதில், ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

இதனால், குறித்த செவிலியர் விதிமுறைகளுக்கு உட்பட்டே வேலை செய்து வருகிறார். இதன் காரணமாக அவரின் குடியுரிமை விண்ணப்பத்தை அரசு ஏற்க வேண்டும் என்று அந்த பெண்ணின் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்