மோனாலிசா ஓவியத்தை நேரில் பார்க்கும் ஆவல் கொண்ட கலை ஆர்வலரா நீங்கள்?: உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

மோனாலிசா ஓவியத்தை பார்க்க விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். அதை நேரில் பார்க்கத் துடிக்கும் கூட்டமோ மிகப்பெரியது.

ஆனால், அதைப் பார்க்கவேண்டுமானால், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்துக்குதான் செல்லவேண்டும்.

இந்நிலையில், கலை ஆர்வலர்களின் பசியைத் தீர்க்கும் வகையிலான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை Louvre அருங்காட்சியகம் வெளியிட்டுள்ளது.

ஆம், Louvre அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் அரை மில்லியன் கலைப்படைப்புகளும் ஒன்லைனில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவைத் தொடர்ந்து அருங்காட்சியகம் மூடப்பட்டதால், கலை ஆர்வலர்கள் இணையம் வாயிலாகவாவது அந்த அரும் கலைப் படைப்புகளைக் காண குவிந்தனர்.

ஆகவே, புதிதாக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ள Louvre அருங்காட்சியகம், தன் 482,000 கலைப்பொருட்களையும் அந்த தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த கலைப்படைப்பை வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

கலைப்படைப்புகளைப் பார்வையிடுவதற்கான கட்டணம்? கட்டணம் எதுவும் கிடையாது, அனைத்துப் படைப்புகளையும் முற்றிலும் இலவசமாகவே மக்கள் பார்வையிடலாம்!

பொதுமக்களுக்கானாலும் சரி, ஆராய்ச்சியாளர்களுக்கானாலும் சரி, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல ஆண்டுகளாகவே இந்த படைப்புகளை இணையத்தில் பதிவேற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டுவந்தோம், இப்போதுதான் அதற்கான முதல் படி எடுத்துவைத்துள்ளோம் என்கிறார் அருங்காட்சியகத்தின் தலைவர், இயக்குநரான Jean-Luc Martinez.

இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு முன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பட்டிருந்த படைப்புகள் மட்டுமின்றி, சேமிப்பகங்களில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதுதான்!


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்