பிரான்சில் கொரோனோ வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸ் அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும், நாட்டில் கொரோனா பரவல் முற்றிலும் தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமைகளில், அதாவது கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவால் 9,094 பேர் புதித்தாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 4.554.683 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில், 360 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தோரின் தொகை 94,956-ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் மட்டும் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதியோர் இல்லங்களில் 25.999 பேர் உயிரிழந்துள்ளனர்.
28,322 நோயாளிகள் கொரேனாத் தொற்றின் தீவிரத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 2;099 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 484 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.974 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் கொரோனாத் தொற்று விகிதமானது, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கொரேனாத் தொற்று விகிதமானது 100,000 பேரிற்கு 371 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.