அறிவியல் ஆலோசகர்களின் ஆலோசனைகளை கேட்பதேயில்லை... பிரான்ஸ் ஜனாதிபதி மீது பகிரங்க குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் ஜனாதிபதி அறிவியல் ஆலோசகர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கொரோனா நிபுணராகிவிட்டார் என்றும், அவர் அறிவியல் ஆலோசகர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்றும் அவரது சகாக்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள்.

வலது சாரியினரும், மேக்ரானை கடுமையாக விமர்சிப்பவருமான Marine Le Pen, கடந்த வசந்த காலத்திலிருந்தே தனது அறிவியல் ஆலோசகர்களின் கருத்துக்களுடன் முரண்பட்டு வரும் மேக்ரான், அவர்களது ஆலோசனையை ஏற்க மறுத்து பள்ளிகளைத் திறந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமுதல் தனது அறிவியல் ஆலோசகர்கள் பொது முடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஆலோசனை கூறியதை தொடர்ந்து எதிர்த்துவந்த மேக்ரானை, அவரது சகாக்களே, ஜனாதிபதி தொற்றுநோயியல் நிபுணராகிவிட்டார் என விமர்சித்துள்ளார்கள்.

தனது சுகாதாரச் செயலரான Olivier Véran ஒரு மருத்துவராக இருந்தும், அவரது கருத்துக்களுக்கே இமானுவல் மேக்ரான் சவால் விடுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்