பெற்றோல் எரிகுண்டுடன் எலிசே மாளிகைக்குள் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு! உடனடியாக கைது செய்த காவல்துறையினர்

Report Print Kavitha in பிரான்ஸ்
0Shares

ஜனாதிபதி மாளிகையான எலிசே வளாகத்துக்குள் நேற்று நண்பகலின் பின்னர் இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் எரிகுண்டுடன் நுழைந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

எலிசே மாளிகை அமைந்துள்ள rue du Faubourg-Saint-Honoré (8 ஆம் வட்டாரம்) வீதியில் மூவர் கொண்ட குழு ஒன்று நடந்து சென்றுள்ளது.

பின்னர் மூவரும் எலிசே வாசலை நெருங்கியதும் திடீரென தங்களது மேலாடையை அகற்றி மறைத்து வைத்திருந்த பெற்றோல் எரிகுண்டை வீசி அதை சிறிய லைட்டர் மூலம் பற்றவைத்தனர்.

இதனை கண்ட பாதுகாவலர்கள் மற்றும் CRS காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு குறித்த குழு நபரை உடனடியாக கைது செய்தனர்.

அதில் கதவு வழியாக எலிசே மாளிகைக்குள் நுழைய முற்பட்ட 33 வயதுடைய நபர் மற்றும் அவருடன் வந்த 22 வயதுடைய பெண் ஒருவரும், 21 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிறிய அளவில் தீ பரவியதால் வேறு அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை , உடனடியாக தீ அணைக்கப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் ஏன் நடந்தது? இதன் நோக்கம் என்ன குறித்து மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலிஸார்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்