பிரான்சில் 3 மாதமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி! முகக்கவசம் இல்லாததல் சிக்கினார்: சுவாரஸ்ய சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் மூன்று மாதங்களாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் முகக்கவசம் அணியாத காரணத்தினால், பொலிசாரிடம் சிக்கிக் கொண்டார்,

பிரான்சின் Brive-la-Gaillarde நகரில் பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்படி சுமார் 47 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார், முகக்கவசம் அணியாத காரணத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மீதம் உள்ளதும் தெரியவந்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர் டிசம்பர் மாதம் மீண்டும் சிறைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக அவர் தலைமறைவாக வசித்து வந்ததாகவும், தேடப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் உடனடியாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்