மே மாதத்தில் சகஜ நிலைக்கு திரும்பும் பிரான்ஸ்: அரசின் திட்டம் என்ன?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

கொரோனா பரவலை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுத்துவரும் நிலையில், மக்கள் மனதில் எழுந்துள்ள ஒரே கேள்வி, நாடு எப்போது சகஜ நிலைக்கு திரும்பும் என்பதுதான்!

தற்போதைய கட்டுப்பாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்பட்சத்தில், சகஜ நிலைக்கு திரும்புவது குறித்து பிரான்ஸ் என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

மே மாதத்தின் நடுப்பகுதியில் நாம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்குவோம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

சில கட்டுப்பாடுகளின் கீழ், காபி ஷாப்களை திறப்போம் என்று கூறியுள்ள மேக்ரான், மே மாதத்தின் நடுப்பகுதி முதல் கோடை துவக்கம் வரை, படிப்படியாக கலாச்சார, பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களை துவக்கும் திட்டம் கைவசம் உள்ளது என்கிறார்.

திட்டப்படி எல்லாம் நடந்தால், மே மாதம் 17ஆம் திகதி முதல் காபி ஷாப்கள் செயல்படத்துவங்கும். என்றாலும், வெளியே அமர மட்டுமே அனுமதி.

ஜூன் 1க்கும் 15க்கும் இடையில், வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மே 15 முதல் கலாச்சார கட்டிடங்கள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பொதுமுடக்கம் சீக்கிரமே முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது. ஆனாலும், இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட குறுகிய கால பொதுமுடக்கங்கள் நீட்டிக்கப்பட்டதால், இது உண்மையாகவே நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை.

என்றாலும், இம்முறை தடுப்பூசி திட்டமும் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் சேர்ந்துள்ளதால் ஒருவேளை அது சாத்தியமாகலாம் என கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்