ஆம்புலன்சை துரத்திய பொலிசார்.. விநோதக் காட்சியை வேடிக்கை பார்த்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் ஆம்புலன்ஸ் ஒன்றை பொலிசார் துரத்திச் செல்லும் விநோதக் காட்சியை மக்கள் காண நேர்ந்தது. பிரான்சின் Ain பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

முதியோர் இல்லம் ஒன்றின் முன், எஞ்சினை அணைக்காமல் நிறுத்தியிருந்த தங்கள் ஆம்புலன்சை யாரோ ஓட்டிச் செல்வதைக் கண்ட ஊழியர்கள், பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

ஆம்புலன்சிலிருந்த GPS ட்ராக்கர் உதவியுடன் வாகனம் செல்லும் பாதையை கண்டுபிடித்த பொலிசார், அதை நிறுத்த முயல, அந்த ஆம்புலன்சோ நிற்காமல் சென்றுவிட்டது.

ஆகவே, பொலிசார் அந்த ஆம்புலன்சை துரத்திச் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக பொலிசார் அதை துரத்த, அந்த ஆம்புலன்ஸ் சுற்றிச் சுற்றி, எந்த இடத்திலிருந்து திருடப்பட்டதோ, அதே இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது.

ஆம்புலன்சை பொலிசார் சுற்றி வளைக்க, ஆம்புலன்சிலிருந்து இறங்கியவர் ஒரு 65 வயது பெண்மணி!

அந்த பெண்மணி அந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்தான்... அவர் எதற்காக அந்த ஆம்புலன்சை எடுத்துச் சென்றார் என்பது தெரியவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்