பிரான்சில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் நாட்டில் கிட்டத்தட்ட இதுவரை பத்து மில்லிய தடுப்பூசி அலகுகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. நாட்டின் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாகியுள்ளது.

இதனால் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன், இதுவரை பிரான்சில் கிட்டத்தட்ட பத்து மில்லியன் தடுப்பூசி அலகுள் போடப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்திற்குள் 271448 பேரிற்கு முதல் அலகு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளதாகவும், 119729 பேரிற்கு இரண்டாம் அலகு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியிலிருந்து,

இதுவரை 9797957 பேரிற்கு முதல் அலகு ஊசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இது பிரான்சின் மக்கள் தொகையில் 14.6 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்