ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் மரணம்: கொலை வழக்குத் தொடர்ந்துள்ள குடும்பத்தினர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கொலை வழக்குத் தொடர்ந்துள்ளனர். பிரான்சின் Annecy பகுதியைச் சேர்ந்தவர் Joël Crochet (63).

மார்ச் 7ஆம் திகதி தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார் Joël.

தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் சுவாசக்கோளாறும், மூட்டுக்களை சைப்பதில் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது Joëlக்கு.

அதைத் தொடர்ந்து, பல இரத்தக்கட்டிகள் உருவானதால் மார்ச் 18ஆம் திகதி உயிரிழந்தார் Joël.

ஆகவே, Joëlஇன் குடும்பத்தினர் கொலை வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

Joëlஇன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தேசிய மருந்துகள் பாதுகாப்பு அமைப்பும் Joël மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

France 3

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்