கார்களில் பயணிக்கும்போது செல்போன் பயன்படுத்தணுமா? இதோ வந்துவிட்டது சூப்பரான தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
கார்களில் பயணிக்கும்போது செல்போன் பயன்படுத்தணுமா? இதோ வந்துவிட்டது சூப்பரான தொழில்நுட்பம்
890Shares
890Shares
lankasrimarket.com

கார்களில் பயணிக்கும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனேகமானவர்கள் செல்போன்களை பாவிப்பதை பெரிதளவில் விரும்பமாட்டார்கள்.

இதற்காக Hands Free எனும் சாதனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக Hands Free ஐ தாண்டி பல அம்சங்களைக் கொண்ட சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ZeroTouch எனும் இச் சாதனத்தை முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான Logitech உருவாக்கியுள்ளது.

இதனை கார்களில் பொருத்தி ஸ்மார்ட் கைப்பேசியினை இணைத்துவிட்டு விசேட அப்பிளிக்கேஷன் ஊடாக திரையில் எவ்வித தொடுகையினையும் செய்யாது செயற்படுத்த முடியும்.

அத்துடன் குரல் வழி கட்டுப்படுத்தல் ஊடாக Google Maps, Spotify என்பவற்றினையும் கையாள முடியும்.

இதன் விலையானது 59.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments