வெற்றிப் பயணத்தை தொடரும் Snapchat கண்ணாடி

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
31Shares
31Shares
Seylon Bank Promotion

கூகுள் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களை உடைய கூகுள் கிளாஸினை சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் Snap Inc நிறுவனமும் Snapchat Spectacles எனும் கண்ணாடியினை அறிமுகம் செய்தது.

இக் கண்ணாடியானது கடந்த வருடம் நொவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அன்றிலிருந்து இன்றுவரையான காலப் பகுதியில் சுமார் 150,000 கண்ணாடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Evan Spiegel உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதேவேளை Snapchat Spectacles இன் புதிய பதிப்பு ஒன்றினை அந்நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.

இதனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்