அமேஷான் பவர் பேங்க் கொள்வனவு செய்தவர்களுக்கு ஓர் தகவல்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
117Shares
117Shares
ibctamil.com

மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான பவர் பேங்கினை, அமேஷான் நிறுவனமும் வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றது.

இந்நிலையில், தனது பவர் பேங் தொகுதி ஒன்றினை அவசர அவசரமாக திருப்பி அழைக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. B00LRK8JDC எனும் உற்பத்திக் குறியீடு கொண்ட ஆறு வகையான பவர் பேங்க்களே இவ்வாறு திருப்பி அழைக்கப்படவுள்ளன.

அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதன் காரணமாகவே திருப்பி அழைக்கப்படவுள்ள நிலையில் இவ் வகை பவர் பேங்க்குகளை பாவிக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பி அழைக்கப்படவுள்ள பவர் பேங்க்குகளின் எண்ணிக்கை சுமார் 260,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 16100 mAh, 10000 mAh, 5600 mAh, 2000 mAh, மற்றும் 3000 mAh உடைய பவர் பேங்க்குகள் ஆகும்.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்