சொன்னதை செய்துகாட்டுமா Facebook? தனியுரிமை முறைகேடு சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகவுள்ள ஸ்மார்ட் கிளாஸ்!

Report Print Ragavan Ragavan in கஜெட்ஸ்
125Shares

பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அதன் smart internet glasses-ஐ வெளியிடவுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் இதுவரை நிறைய வன்பொருள் தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. அந்தவரிசையில், ஒரு இன்டெர்னட் வசதி கொண்ட ஸ்மார்ட் கிளாஸை இந்த 2021 இறுதிக்குள் வெளியிடவுள்ளது.

இதனை பேஸ்புக் நிறுவனத்தின் augmented and virtual realityயின் துணைத் தலைவர் ஆண்ட்ரூ போஸ்வொர்த் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் சரியான வெளியீட்டு தேதியைக் அறிவிக்கவில்லை. அதேபோல், பேஸ்புக் எவ்வளவு ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிடவுள்ளது என்பதும் தெரியவில்லை.

ரே-பான் கண்ணாடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான Luxottica குழுமத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கண்ணாடி augmented reality தொழிநுட்பத்தை ஆதரிக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

இது ஏமாற்றத்திற்குரியது, ஏனென்றால் பேஸ்புக் நிறுவனம் கடந்த 2017-ஆம் ஆண்டு அதன் ஸ்மார்ட் கிளாஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டபோது, அதில் VR மற்றும் AR என இரண்டு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த கட்டத்தில், நிறைய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சொந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன. 2013-ல் கூகிள் நிறுவனம் அதன் Google Glass கிளாஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அப்போதே அதற்கு சரியான மார்க்கெட் கிடைத்ததாக தெரியவில்லை.

சமீபத்தில், ஸ்னாப்சாட் நிறுவனம் பிரபலமாக ஸ்மார்ட் கேமரா கண்ணாடிகளின் பல பதிப்புகளை வெளியிட்டது, அதற்கு சராசரியான வரவேற்பும் கிடைத்தது.

மேலும், ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக ஸ்மார்ட் கிளாஸை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதாவது, ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகப்படுத்துவதில் பேஸ்புக் நிறுவனத்துக்கு நிறைய போட்டிகள் ஏற்கெனவே உள்ளது.

மேலும், கடந்த ஆண்டு பெரிய தனியுரிமை முறைகேடு வழக்கை சந்தித்த பேஸ்புக், பல சர்ச்சைகளுக்கு இடையில் இப்போது இனைய வசதி மற்றும் கமெரா பொருத்தப்பட்டுள்ள ஒரு ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்துகிறது. அதற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்