கோடிகளை வருவாயாக குவித்து வரும் போக்கிமோன் கோ!

Report Print Arbin Arbin in கணணி விளையாட்டு
604Shares

போக்கிமோன் கோ விளையாட்டு வெளியான ஒரே மாதத்தில் இதுவரையான சாதனைகளை முறியடித்து கோடிகளை வருவாயாக குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் பல்வேறு சிக்கல்களும் ஏற்பட உலகின் 15 நாடுகள் இந்த விளையாட்டினை இதுவரை தடை செய்துள்ளனர்.

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் ரூ.1336 கோடி( 200 மில்லியன் டாலர்)களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது கேண்டி கிரஷ் சகா, கிளாஷ் ராயல் ஆகிய விளையாட்டுக்கள் வெளியான 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.

இந்தியா, சீனா நாடுகளில் போக்கிமோன் கோ பயன்பாட்டுக்கு வந்தால் இன்னும் அதிக லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கிமோன் கோ வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் விளையாடி கொண்டே ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் இது உருவாகி வருகிறது.

ஒரு பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் புதிய கணக்கை தொடங்கி இந்த போக்கிமோன் விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் எத்தனை கேரக்டர்களை வேட்டையாடுகிறீர்களோ.., அதற்கேற்ப இந்த கேமில் நீங்கள் புள்ளிகளை பெற முடியும்.

இப்படி அதிக புள்ளிகளை பெறும் நபர்கள் தங்களது பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை மற்றவர்களுக்கு நல்ல விலைக்கு விற்கலாம்.

இதை விலைக்கு வாங்குபவர்கள் கைவசமுள்ள விலைக்கு வாங்கிய புள்ளிகளுடன் தங்களது திறமைக்கேற்ப மேலும் பல கேரக்டர்களை தேடி, கண்டுபிடித்து, வேட்டையாடி ஸ்கோரை உயர்த்தி கொள்ளலாம்.

பின்னர், அவர் விரும்பினால் தனது பாயின்ட்களை இன்னொருவருக்கு விற்று விடலாம். இப்படி பலரை இந்த போக்கிமோன் கோ பித்தர்களாக அலைய வைத்து வருகிறது.

இப்ப்படி, பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை ஏலம் விடுவதற்கான வசதியை ‘இபே’ உள்ளிட்ட இணைய ஏல நிறுவனங்கள் வழிவகுத்து தந்துள்ளன.

’லெவல்-20’ அளவில் உள்ள கணக்குகள் சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை இங்கு ஏலம் விடப்படுகிறது. இதை பலரும் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் ஒருவரது கணக்கின் பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் சுமார் 6.50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments