கடந்த வருடம் அறிமுகமாகிய Pokemon Go ஹேம் ஆனது குறுகிய காலத்தில் உலகெங்கும் பிரபல்யமடைந்திருந்தது.
ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக் ஹேமினால் விபத்துக்களும் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன.
எவ்வாறெனினும் தற்போது வரை இக்ஹேமிற்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு Niantic நிறுவனம் iOS மற்றும் ஆன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இப் பதிப்பில் சில குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.