இளைஞர்களைக் கட்டிப்போட்ட PUBG ஹேமின் இவ் வருட வருமானம் எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
93Shares

கணினி விளையாட்டுக்களுக்கு இன்று சிறார்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாக இருக்கின்றனர்.

அதிலும் பப்ஜி ஹேமினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது.

இக் ஹேம் ஆனது கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அன்ரோயிட் மற்றும் iOS தளங்களிலும் இக் ஹேமினை விளையாடக்கூடியதாக இருக்கின்ற நிலையில் இவ் வருடம் வழமைக்கு மாறாக மிகவும் அதிகமானவர்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர்.

காரணம் கொரோனா நிலமை காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த லொக்டவுனால் பலரும் வீட்டில் முடங்கியிருந்தமையாகும்.

இதனால் குறித்த நிறுவனத்திற்கு இவ் வருடத்திற்கான வருமானமும் அதிகரித்துள்ளது.

அதாவது இதுவரை சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 64.3 சதவீத வளர்ச்சியாகும்.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்