தானியங்கி கார்களை புதிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தும் Ford நிறுவனம்

Report Print Givitharan Givitharan in கியர்
தானியங்கி கார்களை புதிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தும் Ford நிறுவனம்

சாரதி இன்றி தாமாக இயங்கக்கூடிய கார்களை கூகுள் உட்பட மேலும்சில நிறுவனங்கள் வடிவமைத்து வரும் செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு அடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் Volvo நிறுவனமும் தான் வடிவமைத்த தானியங்கி கார்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வந்த செய்தியும் வெளியாகியிருந்தது.

தற்போது மற்றுமொரு தானியங்கி கார் வடிவமைப்பு நிறுவனமான Ford ஆனது மேற்கண்ட ஏனைய இரு நிறுவனங் களும் சவால் விடும் வகையில் தனது கார்களை இரவு நேரங்களில் ஓடச்செய்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது.

அதிலும் முகப்புக்கான மின்குமிழ்களை ஒளிரச் செய்யாது (Headlights) பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றமை விசேடமானதாகும்.

மேலும் கியர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments