ஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Report Print Peterson Peterson in ஜேர்மனி
ஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் பல்வேறு காரணங்களுக்காக புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை அந்நாட்டு அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் சுமார் 60 சதவிகித புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவர்களில் 22,369 நபர்களை கட்டாயப்படுத்தி அவர்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், 2014ம் ஆண்டில் 13,851 நபர்களை மட்டுமே தாய்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடங்கி 2 மாதத்திற்குள் 4,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டின் முதல் 2 மாதங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

அதேசமயம், 2015ம் ஆண்டில் ஜேர்மனியை விட்டு முழு விருப்பத்துடன் 37,200 பேர் அவர்களாகவே தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதே வரிசையில், 2014ம் ஆண்டு தானாகவே ஜேர்மனியை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 13,573 ஆகும்.நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் ஆகிய 3 மாதங்களில் ஜேர்மனியை விட்டு தானாகவே வெளியேறியவர்களின் எண்ணிக்கை 14,095 ஆகும்.

ஜேர்மனியில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் ஜேர்மனியில் குடியேற வந்ததால், அவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளிக்க முடியாமல் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments