இசை விழாவில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அகதிகள்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Jubilee Jubilee in ஜேர்மனி
இசை விழாவில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அகதிகள்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

ஜேர்மனியில் இசை விழா ஒன்றில் கலந்து கொண்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோலோஜினி நகரில் நடந்த புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு கும்பல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அதேபோல் Darmstadt நகரில் நடந்த இசைவிழாவிலும் பெண்கள் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் புகார் கொடுத்ததை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மேலும், 15 பெண்கள் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருவதாக கூறியள்ள பொலிசார், பெண்களின் புகார் படி அவர்கள் தெற்காசிய பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அரபு மற்றும் வட ஆப்பிரிக்க ஆண்கள் கோலோஜினி நகரில் நடந்த கொண்டாட்டத்தில் அதிகம் இருந்ததாகவும், தஞ்சம் கோரி வந்தவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments