மேயரை சரமாரியாக கத்தியால் தாக்கிய நபருக்கு 14 வருடங்கள் சிறை!

Report Print Nivetha in ஜேர்மனி
மேயரை சரமாரியாக கத்தியால் தாக்கிய நபருக்கு 14 வருடங்கள் சிறை!

ஜேர்மனியின் Cologne நகர மேயரை கத்தியால் குத்தி அவர் உயிரிழக்க முக்கிய காரணமான நபருக்கு 14 வருடம் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி, Cologne நகர மேயரான Henriette Reker என்பவரை கத்தியால் குத்தி, காயப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்து்ளளார்.

இக்கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதுடன், குறித்த நபருக்கு வடக்கு Rhine-Westphalia உயர் நீதிமன்றம் 14 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த தாக்குதலில் Henriette Reker உற்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

குற்றவாளியால் தாக்கப்பட்ட Henriette Reker என்ற பெண் அகதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதன் காரணமாகவே தாக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பின்னர் இந்த பெண் மேயர் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்குகளால் வெற்றிப்பெற்றுள்ளார்.

மேலும், அகதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டமை காரணமாகவே Henriette Rekerக்கு அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments