ஜேர்மனியில் வாழும் பிரித்தானியா இளைஞர்களுக்கு சூப்பர் சலுகை!

Report Print Basu in ஜேர்மனி
ஜேர்மனியில் வாழும் பிரித்தானியா இளைஞர்களுக்கு சூப்பர் சலுகை!

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற ஆதரவளித்து வாக்களித்ததை தொடர்ந்து, ஜேர்மனியில் உள்ள பிரித்தானியா இளைஞர்களுக்கு ஜேர்மனி ஆதரவளிக்கும் என அந்நாட்டின் துணை அதிபர் சிக்மார் காப்ரியேல் உறுதியளித்துள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சி(Social Democratic Party) கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியா இளைஞர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது வாக்கொடுப்பை தொடர்ந்து இளைஞர்கள் பலர் உறுதியற்ற எதிர்காலத்தை சந்தித்து வருவதாகவும், இந்த நெருக்கடியான நிலையில், ஜேர்மனி இரட்டை குடியுரிமை சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் என உறுதியளித்துள்ளார்.

தற்போது உள்ள சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை சாராதவர்கள் ஜேர்மனி கடவுச்சீட்டை வைத்திருக்க அனுமதி இல்லை.

ஆனால், ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் வாழும் பிரித்தானியா இளைஞர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். அவர்கள் ஐரோப்பிய குடிமகன்களாக தொடரலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments