வீட்டுத்தோட்டத்தில் நிர்வாண குளியலிட்ட நபர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
வீட்டுத்தோட்டத்தில் நிர்வாண குளியலிட்ட நபர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

ஜேர்மனியில் நபர் ஒருவர் தமது வீட்டுத்தோட்டத்தில் நிர்வாணமாக குளியலிட்டதாக எழுந்த புகாரில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனியில் ரோபர்ட் என்பவர் தமது வீட்டுத் தோட்டத்தில் Sauna ஒன்றை கட்டி முடித்துள்ளார். அதில் அவர் நிர்வாணமாக குளியலிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் 42 வயதான ரோபர்ட்டின் இந்த செயல் அயல்வீட்டில் குடியிருந்து வரும் ஆன்ஸ் என்பவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன் தொல்லை தருவதாகவும் இருப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது தோட்டத்தில் நிர்வாணமாக இருப்பதை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த ரோபர்ட், அயல் வீட்டு ஆன்ஸ் அளித்த உடலமைப்பு வர்ணனையை கேட்டு நீதிபதி வழக்கின் தன்மையை ரோபர்ட்டுக்கு புரிய வைத்ததுடன் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார்.

மட்டுமின்றி தோட்டத்தில் Sauna அமைக்கவும் ரோபர்ட்டுக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதனையடுத்து இந்த வழக்கை மேல்முறையீட்டுக்கு எடுத்துச் சென்ற ரோபர்ட், தமது சுதந்திரத்தில் அயல்வீட்டார் தலையிடுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வழக்கை விசாரித்த Dortmund நீதிமன்றம், ஆன்ஸை கடிந்துகொண்டதுடன், ரோபர்ட்டின் சுதந்திரத்தில் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளது.

மேலும் குற்றவியல் சட்டத்தின்படி எந்த உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் நீதிமன்றத்தால் கண்டுணர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விளக்கங்களை ஏற்கமறுத்த ஆன்ஸ், ரோபர்ட் தமது தோட்டத்தில் வைத்து அதிகமாக மது அருந்தி வருவதாகவும், கழிவறை கட்ட மறுப்பு தெரிவித்து வருவதாகவும், தாம் இதனால் பல இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் ஆன்ஸ் தெரிவித்தார்.

ஆனால், ஒருவர் தமது தோட்டத்தில் சிறுநீர்கழிப்பதற்கு நீதிமன்றம் தடைபோட முடியாது எனவும் நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

இதனிடையே ரோபர்ட்டின் வழக்குரைஞர் தெரிவித்த கருத்து, அந்த வழக்கை ஆன்ஸ் கைவிடும் நிலைக்கு தள்ளியது.

ரோபர்ட் தமது வீட்டை விற்க இருப்பதாகவும், நாட்டின் வேறு பகுதிக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments