"அது எங்கள் பெயர் அல்ல...நாங்கள் விரும்புவது அமைதி": பேரணி நடத்திய ஜேர்மன் அகதிகள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
737Shares

ஜேர்மனியில் இஸ்லாம் தீவிரவாதித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகதிகள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஜேர்மனியில் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையே ஓடும் மின்சார ரயிலில் ஒருவன் பயணிகளை திடீரென கோடாரி மற்றும் கத்தியால் தாக்கினான்.

பின்னர் ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி தப்பிச் செல்ல முயன்றவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் 21 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாய் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலை கண்டித்து ஜேர்மனியில் உள்ள அகதிகள் பேரணி ஒன்றினை நடத்தியுள்ளனர்.

ஜேர்மனியில் அதிகமாக சிரிய அகதிகளே உள்ளனர், இந்த பேரணியில் 25 முதல் 50 அகதிகள் தானாகவே வந்து கலந்துகொண்டு, மதிய உணவு இடைவேளை நேரத்தின்போது பவேரியா நகரில் பேரணியினை நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர்களது கையில் அது எங்களுடைய பெயர் அல்ல, நாங்கள் விரும்புவது அமைதியை என எழுதப்பட்ட பதாகையை கொண்டு சென்றனர்.

இவர்கள் இந்த பேரணியை இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக நடத்தியுள்ளனர், ஏனெனில் இந்த கோடாரி தாக்குதலை நடத்தியது நாங்கள் தான் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments