ஜேர்மனியில் வணிக வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தற்கொலை?

Report Print Arbin Arbin in ஜேர்மனி
ஜேர்மனியில் வணிக வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தற்கொலை?

ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேர் படுகொலைக்கு காரணமான நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் மூனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசாரில் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் முதலில் வெளியான தகவலின் அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய 3 பேர் இந்த படுகொலையில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தற்போது தப்பியுள்ளதாகவும், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் என பொலிஸ் தரப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆனால், தற்போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது தனி ஒருவர் எனவும், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக்கோண்டு இறந்துள்ளதாகவும் பொலிசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் என சந்தேகிக்கும் நபரது உடல் சம்பவம் நடந்த வணிக வளாகத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஒரு கி.மீற்றர் தொலைவில் இருந்து பொலிசாருக்கு கிட்டியுள்ளது.

இதனையடுத்து அந்த நபரது உடலை சோதித்து உறுதி செய்யும் நோக்கில் எந்திர மனிதர் ஒன்றை அனுப்பி சோதனையிட்டுள்ளனர். வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்த பின்னரே உடலை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடினிடையே வெளிநாட்டவர்களை திட்டியதாகவும், இஸ்லாமிய ஆதரவு முழக்கங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது, ஆனால் அவை அனைத்துமே உறுதிப்படுத்தப்படவில்லை.

இச்சம்பவத்தில் 21 நபர்களுக்கு காயப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் 18 வயதான இரானிய ஜேர்மன் குடிமகன்.

கடந்த 2 ஆண்டுகளாக ஜேர்மனியில் மூனிச் நகரில்தான் குடியிருந்து வருகிறார். தாக்குதலில் ஈடுபட்டவர் எந்த பொலிஸ் வழக்கிலும் இதுவரை சிக்கியதில்லை.

முன்னதாக மூனிச் நகர் எங்கும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உச்சகட்ட உஷார் நிலையில் பாதுகாப்பு அதிகாரிகாரிகளால் கொண்டுவரப்பட்டது.

மேலும் பாதுகாப்பு கருதி Moosach மாகாணத்தை முழுவதுமாக பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டு வந்துள்ளனர். தற்போது அவை அனைத்தையும் விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும், ஆனாலும் உச்சகட்ட கண்காணிப்பில் ஆயுதம் ஏந்திய சிறப்பு பொலிசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்களன்று ஓடும் ரயிலில் ஆப்கான் அகதி ஒருவர் கோடாரியால் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறக் கூடும் எனவும் அதிகாரிகள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் தற்கொலை செய்துகொண்டதால் தாக்குதலின் நோக்கம் என்னவென்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments