ஜேர்மன் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி: தாக்குதலை கிண்டல் செய்த அமெரிக்க ஜனாதிபதி

Report Print Peterson Peterson in ஜேர்மனி
ஜேர்மன் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி: தாக்குதலை கிண்டல் செய்த அமெரிக்க ஜனாதிபதி

ஜேர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான சம்பத்தை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நகைச்சுவையாக பதிலளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள முனிச் நகர வணிக வளாகம் ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு ஜனாதிபதி ஒபாமா பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘ஜேர்மனியில் என்ன நடக்கிறது என்பது நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தொடங்கியுள்ளார்.

பின்னர் இந்த துக்க நிகழ்வில் இருந்து உடனடியாக தன்னை விடுவித்துக் கொண்ட ஒபாமா, ‘நம்முடைய வாழ்வியல் பழக்கவழக்கங்களுக்கும், நமக்குள்ள சுதந்திரத்தையும் நினைவுப் படுத்துமாறு இந்த தாக்குதல் நிகழ்வு நடந்துள்ளது.

இதற்கு அடுத்ததாக, தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்பு இல்லாமல் தன்னுடைய மூத்த மகளான மலியாவிற்கு உள்ள அளவுக்கடந்த சுதந்திரத்தை பயன்படுத்தி தந்தையான என்னை அடிக்கடி விட்டுச் சென்று விடுகிறார்.

மன்னிக்கவும், நான் சம்பந்தம் இல்லாமல் பேசிவிட்டேன்’ என ஒபாமா பேசி முடித்ததும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வாய் விட்டு சிரித்துள்ளனர்.

ஜேர்மன் தாக்குதல் நிகழ்வை தனது தனிப்பட்ட விடயத்தில் தொடர்பு படுத்தி நகைச்சுவையாக ஜனாதிபதி ஒபாமா பேசியுள்ளது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments