பேருந்தை திருடிய 11 வயது சிறுவன்: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் பேருந்து ஒன்றை 11 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள பாவரியன் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் நுழைந்து குறிப்பிட்ட சிறுவன் விளையாடி வந்துள்ளான்.

தனியாருக்கு சொந்தமான அந்த பேருந்து சில காரணங்களால் அந்த பகுதியில் உரிமையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பேருந்தினுள் புகுந்து விளையாடி வந்த சிறுவனின் கண்ணில் பேருந்தை இயக்கும் சாவி சிக்கியுள்ளது.

இதை வாய்ப்பாக பயன்படுத்திய சிறுவன் அந்த பேருந்தை அங்கிருந்து இயக்கி தெருவழியாக பிரதான சாலைக்கு எடுத்து வந்துள்ளான்.

மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளையும் ஏற்றியுள்ளான். ஓட்டுனர் சிறுவன் என்று தெரியாமலே மூன்று பயணிகளும் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். இதனிடையே பேருந்து சீராக செல்லவில்லை என்பதை உணர்ந்த பயணிகள் வாகனத்தை ஓட்டுவது யாரென்று கவனித்துள்ளனர்.

அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது, இதுவரை சிறுவன் இயக்கி வந்த பேருந்தில் தாங்கள் இதுவரை பயணம் செய்துள்ளதாக.

உடனடியாக அந்த பயணிகளில் ஒருவர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் கடின முயற்சிக்கு பின்னரே சிறுவனிடம் இருந்து பேருந்தை கைப்பற்றினர்.

மட்டுமின்றி சிறுவனை அவனது தாயாரிடமும் ஒப்படைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறுவனின் பேருந்து பயணம் எந்த வித அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தவில்லை. பரபரப்பான அந்த சாலையில் துணிவுடன் அந்த சிறுவன் பேருந்தை இயக்கியுள்ள போதிலும் பேருந்திற்கு ஆயிரம் யூரோ அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments