பலாத்காரத்திற்கு உள்ளானதாக நாடகமாடிய ஜேர்மன் மொடல்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
367Shares
367Shares
ibctamil.com

பிரபல ஜேர்மன் மொடல் ஜினா லிஸா, தம்மை இருவர் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி தொடர்ந்த வழக்கில் பெர்லின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனி எங்கும் விவாத பொருளான இந்த பாலியல் பலாதகார புகாரில், மொடல் ஜினா லிஸா பொய்யான தகவலை அளித்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி மொடல் அளித்துள்ள வீடியோ ஆதாரமும் நம்பகத்தன்மை அற்றது என நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இருவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், பொய்யான புகார் அளித்த மொடலுக்கு 17,200 பவுண்டு அபராதம் விதித்து பெர்லின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மொடல் லிஸா, ஜேர்மனியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மொடல் லிஸா இரு நபர்களுடன் உறவு வைத்துக்கொண்டது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அந்த வீடியோவில் தோன்றிய இருவரும் தம்மை பலாத்காரம் செய்துள்ளதாக கூறி தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன் மொடல் லிஸாவுக்கு அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது பெர்லின் நீதிமன்றம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments