விமானத்தில் இப்படியும் ஆபத்து ஏற்படுமா? பாதி வழியில் விமானத்தை திருப்பிய விமானிகள்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
1082Shares

ஜேர்மனி நாட்டிற்கு பயணமான விமானத்தில் இருந்த தேநீர் வழங்கும் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்ட காரணமாக விமானம் பாதி வழியில் திசை திருப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகரமான வாஷிங்டன் நகரில் இருந்து லூப்தான்சா விமானம் ஒன்று பயணிகளுடன் ஜேர்மனியில் உள்ள முனிச் நகருக்கு புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு கனடாவில் உள்ள சிட்னி நகர் அருகில் சென்றுக்கொண்டு இருந்துள்ளது.

அப்போது, விமானத்திற்குள் தீயில் கருகும் வாசம் எழுந்ததை தொடர்ந்து அதனை ஒரு பயணி கண்டுபிடித்துள்ளார்.

விமானத்தில் தேநீர்(Coffee) வழங்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், தேநீர் தொடர்ந்து வடிந்துக்கொண்டு இருந்துள்ளது.

இதனால் இயந்திரம் மிகவும் சூடாகி கருகியுள்ளது. இதனை பார்த்த விமானிகள் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

சிட்னியில் இருந்து சுமார் 70 நிமிடங்கள் திரும்ப பயணித்த அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளது.

உடனடியாக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரம் பழுது பார்க்கப்பட்டது.

பின்னர், 18 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பயணிகள் அனைவரும் ஜேர்மனி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தில் வைக்கப்பட்டுள்ள தேநீர் இயந்திரத்திற்கு மின்சாரமானது விமானத்தின் முக்கிய கருவியில் இருந்து கிடைக்கிறது. இதில் இருந்து தான் விமானத்திற்கும் மின்சாரம் கிடைக்கும்.

தேநீர் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு மின்சாரம் பாதிக்கப்பட்டால், அந்த மின்சாரம் மூலம் விமானத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments