பேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்?

Report Print Peterson Peterson in ஜேர்மனி

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களுக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜேர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கூட்டணி கட்சி தலைவரான Volker Kauder என்பவர் தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான வன்முறை கலந்த இனவெறி தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

ஆனால், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் எடுக்க முன்வரவில்லை.

இந்நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இனிவரும் காலத்தில் பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிடக்கூடாது. இவ்வாறு வெளியிடப்படும் பதிவுகளை ஒரு வார காலத்திற்குள் பேஸ்புக் நிறுவனம் நீக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற பதிவிடும் நபர்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தலா 50,000 யூரோ(80,46,038 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வேண்டும் என Volker Kauder வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments