தேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்த நபரை அடித்து கொன்ற கும்பல்

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் கிறித்துவ தேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்த காரணத்திற்காக நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில் உள்ள Freiburg என்ற நகரில் தான் இந்த கொடூர செயல் அரங்கேறியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இந்நகரில் உள்ள Johannes என்ற கிறித்துவ தேவாலயத்திற்கு 51 வயதான நபர் ஒருவர் சென்றுள்ளார்.

பின்னர், தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த நபர், இயற்கை உபாதையின் காரணமாக தேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த 4 பேர் நபரை தடுத்து நிறுத்தி சிறுநீர் கழித்ததற்காக கடுமையாக சாடியுள்ளனர். இந்த தகராறு முற்றியதை தொடர்ந்து 4 பேரும் நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பத்தில் பெயர் வெளியிடப்படாத அந்நபருக்கு பலத்த காயம் ஏற்பட அவர் மருத்துவமனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுநீர் கழித்த காரணத்திற்காக தனது தந்தையை அடித்து கொன்ற கும்பல் மீது அவரது மகன் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் சுமார் 30 முதல் 50 வயதுடைய நால்வரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments