புகலிடம் கோரி வந்த அகதியை கற்பழித்த முகாம் அதிகாரி

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வந்த சிரியா நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை முகாம் அதிகாரி தொடர்ந்து கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Finnentrop-Heggen என்ற நகரில் அகதிகள் முகாம் ஒன்று அமைந்துள்ளது. இம்முகாமில் சிரியா நாட்டை சேர்ந்த 23 வயதான இளம்பெண் உள்பட 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்முகாமிற்கு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவர் உயர் அதிகாரி பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், முகாமில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி அந்த அதிகாரி தொடர்ந்து 4 முறை கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அதிகாரியின் வீட்டிலும் இளம்பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அதிகாரி கற்பழித்ததால் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனை கலைக்க முயன்றபோது அதிகாரி தான் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

அதிகாரியின் பதவியை பறித்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, முகாமிற்கு வழங்கப்பட்ட உதவி பொருட்களை திருடியது, முகாமில் போதை பொருள் விற்பனை செய்தது உள்ளிட்ட 19 குற்றங்கள் அவர் மீது இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் அதிகாரி மீதான அனைத்துக் குற்றங்களுக்கும் தற்போது நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments