முகமூடி அணிந்து ஐ.எஸ் கொடி, துப்பாக்கியுடன் ஜேர்மனிக்குள் நுழைந்த மர்ம நபர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Basu in ஜேர்மனி

மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து ஐ.எஸ் கொடி மற்றும் துப்பாக்கியுடன் ஜேர்மனி எல்லைக்குள் நுழைந்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vlad Tapes என்ற நபரே குறித்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே பரிதாபகரமான நிலையில் இருக்கும் எல்லை குறித்து காட்டவும், பெர்லின் தாக்குதலை தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் வீடியோ வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லையில் பாதுகாப்பு சோதனை இல்லாமல் இருப்பது குறித்து அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த வீடியோவில், டென்மார்க் குடிமகன் ஒருவன் ஐ.எஸ் போன்ற உடை மற்றும் முகமூடி அணிந்து ஐ.எஸ் கொடி, போலி துப்பாக்கியுடன் டென்மார்க் எல்லையில் இருந்து ஜேர்மனி எல்லைக்குள் நுழைகிறார்.

இந்த நிகழ்வு ஒருவர் உதவியுடன் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லையின் பாதுகாப்பு குறித்து சோதித்ததாகவும், இதுபோன்று கவனிக்கப்படாமல் ஐ.எஸ் தீவிரவாதிகளை நாட்டில் நுழைய விடலாமா என Vlad Tapes கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் திறந்த எல்லையாக இருப்பதை நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments