சிறுநீர் கழித்த வாலிபருக்கு அபராதம்: பின்னணி காரணம் என்ன?

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் மது போதையில் சிறுநீர் கழித்த வாலிபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் €1,500 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Brandenburg மாகாணத்தை சேர்ந்த ஜமால்(22) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கடந்த 2015-ம் ஆண்டு தலைநகரான பெர்லினுக்கு சென்றுள்ளார்.

இரவு கிளப்பில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஜமால் தனது நண்பர்களுடன் Holocaust Memorial(இன அழிப்பு நினைவகம்) இடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர், யூதர்களுக்கு எதிராக ஜமால் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், அங்குள்ள கல்லறை மீது ஜமால் சிறுநீரும் கழித்துள்ளார்.

இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து ஜமால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று பெர்லின் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது ‘மது போதையில் இருந்ததால் தான் என்ன செய்கிறேன் என்பதை அறியாமல் கல்லறை மீது சிறுநீர் கழித்து விட்டேன்.

நான் யூதர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், நான் செய்த முட்டாள்தனமாக செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன்’ என ஜமால் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நினைவிடத்தில் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஜமாலுக்கு €1,500 (2,39,225 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments