ஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் வெளியானது

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணம் இஸ்லாமிய ஆதரவு பயங்கரவாதமாக இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் Borussia Dortmund கால்பந்து அணியினர் பயணம் செய்த பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட 3 பகுதியில் இருந்தும் ஒற்றை எழுத்து ஒன்றை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த எழுத்தானது 2016 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் அமைந்துள்ள அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையது எனவும் பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பெர்லின் தாக்குதலுக்கு முக்கிய காரணியாக செயல்பட்டது ஐ.எஸ் அமைப்பாகும். சிரியாவில் ஜேர்மன் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தாக்குதலை ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள் மேற்கொண்டனர்.

ஜேர்மனி மொழியில் குறிக்கப்பட்ட அந்த எழுத்தானது இப்படி துவங்குகிறது, அல்லாவின் பெயரால், மிக்க அருள் நிறைந்தவர், நிகரற்ற அன்புடையோன்.

குறிப்பிட்ட எழுத்தை தொடர்பு படுத்தியே விசாரணையை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். மட்டுமின்றி குறுப்பிட்ட எழுத்துக்கு இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்பு உள்ளனவா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments