துருக்கியில் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்த வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு

Report Print Thayalan Thayalan in ஜேர்மனி

துருக்கியில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் ஜேர்மனியில் வசிக்கும் துருக்கியர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே மேர்க்கல் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, “துருக்கியில் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வு பொதுவாக்கெடுப்பிற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள துருக்கி தூதரங்களை வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்துவதை பேர்லின் அங்கீகரிக்கவில்லை. மரணதண்டனை என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு அனுமதி கொடுக்க மாட்டோம். இதுபோன்ற அனுமானமான கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க மாட்டோம். ஆனால் இந்த கேள்வி துரதிஷ்டவசமாக துருக்கியில் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சியில் கடந்த 2004ஆம் ஆண்டு துருக்கியில் முற்றாக மரணதண்டனை ஒழிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி நடைபெற்ற துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கான வாக்கெடுப்பின் பின்னர், மரண தண்டனை வழங்கப்படுவது துருக்கியில் மீண்டும் சட்டமாக்கப்பட வேண்டும் என எர்டோகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments