ஜேர்மனிய இராணுவ வீரர் கைது

Report Print Thayalan Thayalan in ஜேர்மனி

குடியேற்றவாசிகளுக்கு எதிரான தீவிர வலதுசாரி குழுக்களின் சதித்திட்டங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனிய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய மக்ஸிமிலியன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரச வழக்கறிஞர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், அரசுக்கு எதிரான வன்முறைத் திட்டங்களை திட்டமிட்டிருந்ததாக குறித்த இராணுவ வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மூன்றாவது சந்தேகநபர் இவராவார். முன்னதாக கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இராணுவ அதிகாரி ஒருவரும் மாணவன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த மூன்று சந்தேகநபர்களும் தாம் அகதிகள் என்று கூறிக்கொண்டு தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரி, தன்னை சிரிய அகதி என போலி அடையாளத்தை பயன்படுத்தி பதிவுசெய்து பவேரியாவில் அகதிகள் தங்குமிடத்திற்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் அகதிகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடுகளை ஜேர்மனி கண்டிருக்கின்றது.

ஜேர்மனிக்குள் அகதிகள் நுழைவதற்கு தீவிர வலதுசாரிக் குழுக்கள் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments