அகதிச் சிறுவர்களுக்கு தந்தையாக நடிக்கும் ஜேர்மனி ஆண்கள்: அதிர வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
285Shares
285Shares
ibctamil.com

ஜேர்மனியில் பணத்திற்காக அங்குள்ள ஆண்கள் அகதிச் சிறுவர்களுக்கு தந்தையாக நடித்து வருவதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் எந்த ஆணும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு தந்தையாக பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். அங்கு சட்டப்பூர்வமாக இதை அனுமதிக்கின்றனர்.

ஆனால் அரசு அனுமதிக்கும் இந்த அரிய திட்டத்தை அகதிகளாக வரும் பெண்களும் ஜேர்மன் ஆண்களும் தவறாக பயன்படுத்தி வருவதாக பெர்லின் சட்டவல்லுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜேர்மனியில் கர்ப்பமாக இருக்கும் அகதி ஒருவர் குறிப்பிட்ட தொகையை ஆண் ஒருவருக்கு அளித்து தந்தையாக பொறுப்பேற்க செய்கின்றனர்.

இதனால் குறித்த குழந்தையானது ஜேர்மன் குடிமகனாக கருதப்படுவது மட்டுமின்றி, குழந்தையின் தாயாரும் சட்டசிக்கலின்றி ஜேர்மனியில் குடியிருக்கும் உரிமையைப் பெறும் நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற முறைகேடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக கூறும் சட்ட நிபுணர்கள், பத்து குழந்தைகளுக்கு வரை ஒருவர் தந்தையாக பொறுப்பேற்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது என்கின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட போலியான தந்தைகள் உருவாகியுள்ளதாக கூறும் சட்டத்துறையினர், குழந்தை ஒன்றிற்கு சில ஆயிரம் யூரோ தொகையை பெண்கள் இதற்காக செலவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், பெர்லினில் இருக்கும் ஒரே ஒரு குடியிருப்பில் கர்ப்பமான 70 வியட்நாம் பெண்கள் குடியிருந்து வருவதாகவும், அந்தப் பெண்கள் குறிப்பிட்ட தொகையை தந்தையாக பொறுப்பேற்கும் நபருக்கு வழங்கியிருக்கலாம் எனவும் சட்டவல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டுவராமல் இதுபோன்ற முறைகேடுகளை ஒழிக்க முடியாது எனக் கூறும் சட்ட நிபுணர்கள், இதுபோன்ற நடவடிக்கைகளை விசாரிக்க போதுமான சட்டமும் இல்லை என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments